பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சுயேச்சை எம்பி ரூபர்ட் லோ (Rupert Lowe) நிகழ்த்திய உரையில், அங்கு பல தசாப்தங்களாக அரங்கேறி வரும் மிகக் கொடூரமான சிறுவர் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கூட்டு பாலியல் கும்பல்களின் (Grooming Gangs) செயல்பாடுகள் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களின் நேரடி வாக்குமூலங்களைப் பகிர்ந்த அவர், 13 வயது சிறுமியாக இருந்தபோது 3 ஆண்டுகளில் சுமார் 600 முதல் 700 ஆண்களால் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட கொடூரத்தையும், மற்றொரு சிறுமி மதுபாட்டில்களால் சித்திரவதை செய்யப்பட்டதையும் கண்ணீருடன் சுட்டிக்காட்டியுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த வெள்ளை இன மற்றும் கிறிஸ்தவ சிறுமிகளையே இந்த கும்பல் குறிவைத்து இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தலையிட்டால் தங்களுக்கு “இனவெறியர்கள்” என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகளும் அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதே இக்குற்றங்கள் பெருக முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. பிரிட்டன் அரசு நடத்திய விசாரணையில், இத்தகைய கொடூர வன்கொடுமைகளில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோனோர் பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் வியாபாரிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் முழுவதும் குறைந்தது 85 இடங்களில் இதுபோன்ற பாலியல் கும்பல்கள் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
ரோதர்ஹாம் பகுதியில் மட்டும் 1997-2013 காலகட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2023-ல் மட்டும் 4,228 பாலியல் குற்றங்கள் இத்தகைய கும்பல்களால் நடந்துள்ளதாக, பிரிட்டனில் குழந்தைகளுக்கு எதிரான 1.15 லட்சத்திற்கும் அதிகமான குற்றங்கள் பதிவாகியுள்ளன. பிரிட்டனில் நடந்துள்ள இந்த கடுமையான மனித உரிமை மீறல் விவகாரம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
