தமிழகமே அதிர்ச்சி… கிரிவலப்பாதையில் பதறவைத்த 10 பேர் கும்பல்… 23 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி… திருவண்ணாமலையில் நள்ளிரவில் நடந்த கொடூரம்…!

By Nanthini on ஆனி 2, 2026

Spread the love

திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே உள்ள அத்தியந்தல் ஏரிக்கரை பகுதியில், 23 வயது இளம்பெண் ஒருவரை 10 பேர் கொண்ட கும்பல் வன்புணர்வு நோக்குடன் அரை நிர்வாணப்படுத்தி, அதனை வீடியோவாகப் பதிவு செய்துள்ள அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த துயரச் சம்பவத்தின் போது, அந்த பெண்ணிடம் இருந்த நகைகளையும் அந்த கும்பல் பறித்துச் சென்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தற்போது 7 பேரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான இத்தகைய பாலியல் வன்கொடுமைகளும் அத்துமீறல்களும் அடுத்தடுத்துத் தொடர்வது, சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தையும், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.