“நீங்க ரொம்ப ஹாட்டா இருக்கீங்க..” – மெசேஜ் அனுப்பி டார்ச்சர் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்… பிரபல நடிகை பரபரப்பு புகார்….!

By Nanthini on ஆனி 2, 2026

Spread the love

பிரபல இந்தித் தொலைக்காட்சித் தொடரான ‘டாரக் மேத்தா கா ஊல்டா சஸ்மா’ மற்றும் ‘ULLU’ இணையத் தொடர்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை நேஹல் வதோலியா. இவர் சமீபத்தில் ‘சுனோ இந்தியா’ என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் தனக்கு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வழிந்ததாகக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அண்மையில் குஜராத் நடிகர் கரண் ஜோஷி என்பவர் தனக்கு அனுப்பிய தவறான மெசேஜ்களை ஆதாரத்துடன் வெளியிட்ட நேஹல், தற்போது கிரிக்கெட் வட்டாரத்திலும் ஒரு புகாரைக் கிளப்பியுள்ளது இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

   

அந்த நேர்காணலின் போது, “உங்களுக்கு எப்போதாவது ஏதேனும் ஒரு கிரிக்கெட் வீரரிடம் இருந்து இன்ஸ்டாகிராமில் மெசேஜ்கள் வந்தது உண்டா?” என்ற கேள்வி நேஹலிடம் எழுப்பப்பட்டது. இதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த அவர், “அவருடைய பெயரை நான் சொல்லவா? அவர் அவ்வளவு பெரிய பிரபலம் கிடையாது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, தற்போது விவாகரத்தும் ஆகிவிட்டது” என்று ஒரு பெரிய க்ளூவை வீசியுள்ளார். நடிகையின் இந்த அதிரடித் தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

மேலும் அந்த வீரரின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய நேஹல், “நான் இன்ஸ்டாகிராமில் போடும் ஸ்டோரிகளுக்கு அவர் அடிக்கடி ரிப்ளை செய்வார். ‘நீங்க ரொம்ப ஹாட்டா இருக்கீங்க’, ‘பியூட்டிஃபுல்’, ‘பிரெட்டி’ என்று தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வழிந்துகொண்டே இருப்பார்” என்று கூறியுள்ளார். தான் இப்போது ஒரு மெசேஜ் அனுப்பினால் கூட, அவர் உடனடியாகத் தொடர்ந்து பேச ஆரம்பித்துவிடுவார் என்றும், ஆனால் தனக்கு அவரிடம் பேச எந்த விருப்பமும் இல்லாததால் சில நாட்களுக்கு முன்பு அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து முற்றிலும் பிளாக் செய்துவிட்டதாகவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

நடிகை நேஹல் வதோலியா அந்தப் பதிவில் குறிப்பிட்ட கிரிக்கெட் வீரரின் பெயரை நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும், “ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, விவாகரத்தான நபர்” என்ற க்ளூவை நெட்டிசன்கள் கையில் எடுத்துக்கொண்டு தீவிரமாகத் தேடத் தொடங்கிவிட்டனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் தங்களுக்குத் தோன்றிய கிரிக்கெட் வீரர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கமெண்ட் செய்து வரும் நிலையில், அந்த ரகசிய கிரிக்கெட் வீரர் யார் என்ற விவாதம் தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.