“நான் இல்லைன்னா நீங்க இந்நேரம் ஜெயில்ல” பைத்தியக்காரத்தனமா நடந்துக்காதீங்க.. நெதன்யாகுவை போனில் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய டிரம்ப்… வெள்ளை மாளிகை ரகசியம் கசிந்தது..!!

By Soundarya on ஆனி 2, 2026

Spread the love

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் வெளியிட்ட செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தலைவர்களுக்கும் இடையே அண்மையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது, நெதன்யாகுவை நோக்கி “பைத்தியகாரத்தனமாக நடந்து கொள்கிறீர்கள்” என டிரம்ப் விமர்சித்துள்ளார். மேலும், “நான் மட்டும் இல்லையென்றால் நீங்கள் இந்நேரம் ஜெயிலுக்குச் சென்றிருப்பீர்கள்” என்று டிரம்ப் மிகவும் காரசாரமாகக் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து பேசிய டிரம்ப், இஸ்ரேல் நாட்டுக்கே உலக அளவில் கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக நெதன்யாகுவின் செயல்பாடுகள் இருப்பதாகவும், இதனால் ஒட்டுமொத்த உலகமே அவரை வெறுப்பதாகவும் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். நெதன்யாகுவின் தற்போதைய அரசியல் மற்றும் ராணுவ நகர்வுகளுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுள்ள அதிருப்தியை இந்தத் தொலைபேசி உரையாடல் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. பாரம்பரிய நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தலைவர்களுக்கிடையேயான இந்த மோதல் போக்கு உலக அரசியலில் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.