பகீர்.. நள்ளிரவில் கணவன் முகத்தில் ஆசிட் வீசிய பெண்..! நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு…!

By Swetha on ஆனி 2, 2026

Spread the love

உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியைச் சேர்ந்த 30 வயதான முசாஃபர் அலி என்பவருக்கும், பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த 28 வயதான கஹ்கஷான் என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த சில காலமாகவே கடுமையான குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. மனைவி கஹ்கஷான் தொடர்ந்து பல ஆண்களுடன் அலைபேசியில் பேசி வந்ததை முசாஃபர் அலி கடுமையாக எதிர்த்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கடந்த மார்ச் 2025-இல் ஒரு நாள் நள்ளிரவில் கணவர் முசாஃபர் அலி தூங்கிக் கொண்டிருந்தபோது, கஹ்கஷான் அவர் முகத்தில் கொடூரமான முறையில் ஆசிட்டை ஊற்றியுள்ளார்.

இந்தக் கொடூரமான ஆசிட் தாக்குதலால் முசாஃபர் அலியின் முகம் முற்றிலும் சிதைந்தது மட்டுமன்றி, அவரது இரண்டு கண்களின் பார்வையும் நிரந்தரமாகப் பறிபோனது. மேலும் அவரது வயிறு, கைகள் மற்றும் கால்களிலும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன. இச்சம்பவம் நடந்து பல மாதங்கள் கடந்த நிலையிலும் அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இத்தாக்குதல் குறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

   

இந்த வழக்கு சம்பல் மாவட்டத்திலுள்ள விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட வலுவான உடற்பரிசோதனை ஆதாரங்கள், சாட்சியங்கள் மற்றும் வாதங்களின் அடிப்படையில் கஹ்கஷான் குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதி செய்தது. கணவனைத் திட்டமிட்டு கொலை செய்ய முயன்றது மற்றும் அவரது பார்வையைப் பறித்த குற்றத்திற்காக, நீதிமன்றம் அந்தப் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்ட முசாஃபர் அலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஒரு பெரிய நிம்மதியை அளித்துள்ளது.