“நீங்கதான் MLA.. நீங்கதான் மினிஸ்டர்!”…. நான் உங்க வீட்டு பிள்ள மா… சிவகாசி மேடையில் அடிச்சிவிட்ட அமைச்சர் கீர்த்தனா…!

By Nanthini on ஆனி 2, 2026

Spread the love

சிவகாசியில் நடைபெற்ற தொகுதி வாக்காளர்களுக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர் கீர்த்தனா அவர்கள் கலந்துகொண்டு வாக்காளர்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். அப்போது பொதுமக்களிடையே மிகவும் உருக்கமாக உரையாற்றிய அவர், “இந்தத் தொகுதி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து மிகப் பெரிய பொறுப்பை என் கையில் ஒப்படைத்திருக்கிறார்கள். அதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்; அந்த கடமையை நிச்சயம் முழுமையாக நிறைவேற்றுவேன். நான் அமைச்சர் ஆகிவிட்டதால் எப்போதும் சென்னையில்தான் இருப்பார் என்று தவறாக நினைக்க வேண்டாம். நான் எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளைதான்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், மக்களின் குறைகளைக் கேட்கவும், அவர்களுக்கான பணிகளைச் செய்யவும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று உறுதி அளித்தார். “பொதுமக்களாகிய நீங்கள் இல்லை என்றால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது; எனக்கு இந்த எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவிகள் கிடைத்திருக்காது. தேர்தலில் நான் பெற்ற இந்த வெற்றி உங்கள் ஒவ்வொருவரின் வெற்றி. நீங்கள்தான் உண்மையான எம்.எல்.ஏ, நீங்கள்தான் உண்மையான அமைச்சர். வரும் 5 ஆண்டு கால ஆட்சிக்குள் சிவகாசி தொகுதிக்கு எவ்வளவு நன்மைகளையும் மாற்றங்களையும் கொண்டு வர முடியுமோ, அத்தனை மாற்றங்களையும் நிச்சயம் கொண்டு வருவேன்” என்று தொகுதி மக்களின் கைதட்டல்களுக்கு இடையே அவர் உறுதியளித்தார்.