அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 16 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்களுடன் மொத்தம் 675 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
ஆர்சிபி அணியின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, மைதானத்தில் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் பகிர்ந்து கொண்ட நெகிழ்ச்சியான தருணம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. போட்டியின் வெற்றியைத் உறுதிசெய்தவுடன் விராட் கோலி, பார்வையாளர் அரங்கில் இருந்த அனுஷ்காவை நோக்கி ‘பறக்கும் முத்தம்’ (Flying Kiss) கொடுத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “one felt nice, we did it twice” என்று எழுதப்பட்ட சிறப்பு டி-சர்ட் அணிந்த கோலியின் புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார், இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
