ஸ்கெட்ச் பக்காவா இருக்கு..! இபிஎஸ்-க்கு இன்ப அதிர்ச்சி.. திடீரென அதிமுகவில் இணைந்த முன்னாள் பாமக பிரமுகர்..!!

By Soundarya on ஆனி 1, 2026

Spread the love

கொங்கு மண்டலத்தின் முக்கிய அரசியல் பிரமுகரான பொங்கலூர் மணிகண்டன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை (EPS) நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். முன்னதாக, இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) மாநில துணைத் தலைவராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2019-ஆம் ஆண்டு பாமக கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் தனது பதவியிலிருந்து விலகினார்.

இபிஎஸ்-க்கு இன்ப அதிர்ச்சி: பாமக பதவியிலிருந்து விலகிய பிறகு, அரசியல் விமர்சகராகப் பல்வேறு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பொங்கலூர் மணிகண்டன் பங்கேற்று வந்தார். இந்த நிலையில், அவர் திடீரென அதிமுகவில் ஐக்கியமாகி அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார். இந்தச் சேர்க்கை கொங்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.