இங்க பாரு தம்பி..! இந்த நக்கல் இங்க வேணாம்.. பணிவா பேசுனா தான் வேலை நடக்கும்… கல்குவாரி ஊழியரை மிரட்டிய TVK MLA..!!

By Soundarya on வைகாசி 31, 2026

Spread the love

போளூர் தொகுதி தவெக (தமிழக வெற்றிக் கழகம்) எம்.எல்.ஏ அபிஷேக், குன்னத்தூர் பகுதியில் உரிமம் பெற்று இயங்கி வரும் கல் குவாரி ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டும் தொனியில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவாரி ஊழியரிடம் கடுமையான தொனியில் எச்சரித்த எம்.எல்.ஏ அபிஷேக், “இங்க பாரு தம்பி, இந்த மாதிரி கிண்டல் பண்ற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காதே. அதிகாரிகளுக்கு முன்னாடி எப்படி பேசணும்னு முதல்ல கத்துக்கோ” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

   

மேலும், “அதிகாரிகளிடம் பணிவாகப் பேசினால் மட்டும்தான் காரியம் நடக்கும், வேலை ஆகும்” என்று தனது அதிகாரத் தோரணையை வெளிப்படுத்தும் வகையில் அந்த ஊழியரை அவர் எச்சரித்துள்ளார். தவெக எம்.எல்.ஏ-வின் இந்த அதிரடி மிரட்டல் பேச்சு தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.