விஜய்-சங்கீதா ஒன்று சேர்வார்கள்… சங்கீதாவை கைவிடமாட்டார்… விஜய்யின் நெருங்கிய உறவினர் சொன்ன விஷயம்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

By Soundarya on வைகாசி 31, 2026

Spread the love

தமிழகத்தின் பிரபல நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் குறித்து சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. விஜய் தனது மனைவி சங்கீதாவை கைவிட மாட்டார் என்றும், அவர் அப்படிப்பட்ட குணம் கொண்டவர் அல்ல என்றும் விஜய் குடும்பத்திற்கு நெருக்கமான உறவினரான ஜெயந்தி கண்ணப்பன் தெரிவித்துள்ளார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஏ.எல். சீனிவாசனின் மருமகள் ஆவார்.

விஜய் – சங்கீதா தம்பதியினருக்கு இடையே தற்போது இருக்கும் கருத்து வேறுபாடு என்பது அனைத்து குடும்பங்களிலும் பொதுவாக நடக்கும் ஒரு சாதாரண பிரச்சனைதான் என்று ஜெயந்தி கண்ணப்பன் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த தற்காலிகப் பிரிவிற்குப் பிறகு விரைவில் இருவரும் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என்றும் அவர் நம்பிக்கையுடன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.