FLASH NEWS: குஷியோ குஷி…. கடன் முழுவதும் தள்ளுபடி… CM விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி….!

By Nanthini on வைகாசி 31, 2026

Spread the love

தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, 5 ஏக்கர் வரையிலான விவசாயிகளின் பயிர்க்கடன்கள் அனைத்தையும் முழுமையாகத் தள்ளுபடி செய்வதற்கான புதிய அதிரடி அறிவிப்பை வெளியிடத் தமிழக அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. கடந்த 25-ஆம் தேதி வெளியிடப்பட்ட கடன் தள்ளுபடி அறிவிப்பில் சில திருத்தங்களை மேற்கொண்டு அதனை வாபஸ் பெற முடிவு செய்துள்ள முதலமைச்சர் விஜய், விவசாயிகளுக்குக் கூடுதல் பயனளிக்கும் வகையில் புதிய அரசாணையைத் தயாரிக்குமாறு கூட்டுறவு மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர்களுக்கு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்னும் ஓரிரு நாட்களில் தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியாகும் எனத் துறை சார்ந்த உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.