பைக் வாங்குவதற்கு ரூ.50,000 மானியம்.. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா..? இதோ தெரிஞ்சிக்கோங்க..!!

By Soundarya on வைகாசி 31, 2026

Spread the love

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு, புதிய இருசக்கர வாகனம் வாங்க ரூ.50,000 மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்கள், பேஷ்இமாம்கள், ஆலிம்கள் மற்றும் அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் உள்ளிட்டோர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துப் பயன்பெற தகுதியானவர்கள் ஆவர்.

   

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய பயனாளிகள், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து, வரும் ஜூன் 30, 2026-க்குள் அதே அலுவலகத்தில் சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது