தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnvelaivaaippu.gov.in என்ற முகவரிக்கு முதலில் செல்ல வேண்டும். அங்கு முகப்புப் பக்கத்தில் உள்ள ‘New User ID Registration’ என்ற லிங்க்கைக் கிளிக் செய்து, விதிமுறைகளை படித்து ‘I Agree’ என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் திறக்கும் பக்கத்தில் விண்ணப்பதாரரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி மற்றும் குடும்ப அட்டை (Ration Card) எண் போன்ற விவரங்களை உள்ளிட்டு, உங்களுக்கான புதிய பயனர் குறியீடு (User ID) மற்றும் கடவுச்சொல்லை (Password) உருவாக்கிச் சமர்ப்பிக்க வேண்டும்.
வெற்றிகரமாக கணக்கு உருவாக்கிய பிறகு, உங்களது User ID மற்றும் Password-ஐப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். அடுத்ததாகத் தோன்றும் பக்கத்தில் உங்களது தனிப்பட்ட விவரங்கள் தொடர்பு முகவரி (Contact Details) மற்றும் சாதிச் சான்றிதழ் விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். தொடர்ந்து, உங்களது கல்வித் தகுதிகள் (10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு) மற்றும் தொழில்நுட்பத் தகுதிகள் (தட்டச்சு, கணினிப் படிப்பு போன்றவை) குறித்த மதிப்பெண் சான்றிதழ் விவரங்களை ஒவ்வொன்றாக ‘Add’ கொடுத்துச் சேமிக்க வேண்டும்.
அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து இறுதிச் சமர்ப்பிப்பு செய்தவுடன், உங்களுக்கான தனித்துவமான வேலைவாய்ப்புப் பதிவு எண் மற்றும் அடுத்த புதுப்பித்தல் தேதி அடங்கிய தற்காலிக அட்டை உடனடியாகத் திரையில் தோன்றும். விண்ணப்பதாரர்கள் முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Print ID Card’ என்ற விருப்பத்தைப் பயன்படுத்தி தங்களுடைய வேலைவாய்ப்பு அடையாள அட்டையை பிடிஎஃப் (PDF) வடிவில் எளிதாகப் பதிவிறக்கம் செய்தோ அல்லது பிரிண்ட் அவுட் எடுத்தோ பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
