“டிரான்ஸ்பார்மர் பழுதுபார்க்கச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்!.. மின்சாரத் துறை பொறியாளரை கொடூரமாக தாக்கிய கும்பல்.. இணையத்தை உலுக்கும் வீடியோ”..!!!

By Muthu Mani on வைகாசி 30, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி பகுதியில், பழுதடைந்த மின்மாற்றியை (டிரான்ஸ்ஃபார்மர்) பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்சாரத் துறை இளநிலைப் பொறியாளர் (JE) பிரேம் சிங், அங்குள்ள சில கிராம மக்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அவரைப் பிணைக் கைதியாகப் பிடித்த அந்த கும்பல், நெஞ்சு மற்றும் தலைப் பகுதியில் பலத்த உள் காயங்கள் ஏற்படும் வகையில் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளதுடன், அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தையும் பறித்துச் சென்றுள்ளது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த இளநிலைப் பொறியாளர் பிரேம் சிங், சிகிச்சைக்காக அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு ஊழியர் ஒருவர் தனது கடமையைச் செய்யும்போது, அவர் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.