உலகின் மிகப்பெரிய பாலூட்டி இனம் என்ன தெரியுமா..? திமிங்கிலம் ஒன்று தன் குட்டிக்கு பாலூட்டும் அரிய காட்சி.. இணையத்தில் வைரலாகிறது..!

By Swetha on வைகாசி 30, 2026

Spread the love

அண்மையில் இணையத்தில் திமிங்கிலம் ஒன்று தன் குட்டிக்கு பாலூட்டும் அரிய காட்சியடங்கிய காணொளி வெளியாகி, உலகளவில் படு வைரலாகி வருகிறது. கடலில் வாழும் ஏனைய நீர்வாழ் உயிரினங்களில் இருந்து திமிங்கிலங்கள் முற்றிலும் வேறுபட்ட இயல்புகளைக் கொண்டிருப்பது இந்த காணொளி மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவையாக நீலத் திமிங்கிலங்கள் அறியப்படுகின்றன. இவை மீன்களைப் போல நீரிலேயே வாழ்ந்தாலும், மீன் இனத்தைச் சேர்ந்தவை அல்ல. மனிதர்களைப் போன்றே குட்டிகளை ஈன்று பாலூட்டுவது, செவுள்களுக்குப் பதிலாக நுரையீரல் மூலம் சுவாசிப்பது மற்றும் உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும் வெப்ப இரத்தத்தைக் கொண்டிருப்பது போன்ற விசேட பாலூட்டி இயல்புகளை இவை கொண்டுள்ளன.

   

https://www.instagram.com/reel/DYNKKGft2NL/?utm_source=ig_web_copy_link

   

நீலத் திமிங்கிலத்தின் குட்டி தினமும் சுமார் 200 முதல் 400 லிட்டர் வரை கொழுப்புச் சத்து மிகுந்த தாய்ப்பாலைக் குடிக்கிறது. இந்த ஊட்டச்சத்து மிக்க பாலின் காரணமாக, அந்தக்குட்டி ஒரு மணி நேரத்திற்கு சுமார் 5 கிலோ வரை எடை கூடுகிறது. இதன் மூலம், ஒரு குட்டித் திமிங்கிலம் வெறும் 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) 100 கிலோ வரை தனது எடையை மிக எளிதாக அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.