CM விஜய் செல்லுமிடமெல்லாம் இருக்கும்.. அந்த இளைஞர் யார்..? 8 ஆண்டு கால நம்பிக்கை.. வெளியான பின்னணி..!

By Swetha on வைகாசி 30, 2026

Spread the love

தமிழக முதலமைச்சர் விஜய் அண்மையில் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது, அவருடன் சென்றவர்களின் பட்டியல் வெளியானது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஒரு இளைஞனைப் பற்றிய வீடியோ காட்சிகள் வெளியாகி, அவர் யார் என்ற விவாதத்தை இணையத்தில் ஏற்படுத்தியது. தற்போது அந்த இளைஞர் குறித்த முழு விவரங்களும் வெளியாகியுள்ளன.

அவருடன் சென்ற அந்த இளைஞரின் பெயர் ஜெகதீஷ் அஸ்வதி. அவர் முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட ஹேர் ஸ்டைலிஸ்ட் (சிகை அலங்கார நிபுணர்) ஆவார். அண்மையில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவின் போது, அவருக்குச் சிகை அலங்காரம் செய்ததும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் ஊடகங்களுக்குத் தனது பேட்டியையும் அளித்துள்ளார்.

   

பத்தாம் வகுப்பு படிக்கும் போதே சினிமா ஆசையோடு நுழைந்த ஜெகதீஷ், பல முன்னணி நிபுணர்களிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். ‘பிகில்’ திரைப்படத்தின் போது விஜய்யைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்ற இவர், கடந்த 8 ஆண்டுகளாக ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’, ‘வாரிசு’, ‘லியோ’, ‘தி கோட்’ மற்றும் இன்னும் வெளியாகாத ‘ஜன நாயகன்’ வரை விஜய்யின் அனைத்துப் படங்களிலும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின் போது விஜய் தன்னை “வெல்டன் தம்பி!” எனப் பாராட்டிய தருணம் தன் வாழ்வில் மிகவும் சிறப்பானது என்று ஜெகதீஷ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.