இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட.. முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் இறுதிச்சடங்கு எப்போது..?

By Swetha on வைகாசி 30, 2026

Spread the love

ஈரானின் ஆன்மீகத் தலைவராக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பதவி வகித்த அயதுல்லா அலி கமேனி, கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது மறைவைத் தொடர்ந்து உடனடியாக இறுதிச்சடங்கு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணிக்கு இடையே ஏற்பட்ட போர் மற்றும் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, அந்த இறுதி ஊர்வலமும் சடங்குகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டன.

தற்போது ஏப்ரல் மாதம் முதல் போர்நிறுத்தம் ஓரளவுக்கு நடைமுறையில் உள்ளதால், மறைந்த முன்னாள் தலைவர் கமேனிக்கு மிக பிரம்மாண்டமான முறையில் இறுதிச்சடங்கு நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை ஈரான் அரசு தீவிரமாகத் தொடங்கியுள்ளது. இதற்காக ‘இஸ்லாமிய பிரச்சார ஒருங்கிணைப்புக் குழு’ மூலம் ஒரு தனித் தலைமையகம் உருவாக்கப்பட்டு, பல்வேறு அரசு முகமைகள் இணைந்து பாதுகாப்பு மற்றும் கூட்ட மேலாண்மைக்கான திட்டங்களை வகுத்து வருகின்றன.

   

இந்த இறுதிச்சடங்கு எப்போது நடைபெறும் என்ற அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், கமேனிக்கு பின் புதிய ஆன்மீகத் தலைவராக பொறுப்பேற்றுள்ள அவரது மகன் மொஜ்தபா கமேனி, தற்போதைய பதற்றமான சூழலால் இன்னும் பொதுவெளியில் நேரடியாகத் தோன்றவில்லை என்பதும், நாட்டின் பாதுகாப்பு இன்னும் முழுமையாக சீரடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.