BREAKING: அதிரடி நீக்கம்… CM விஜய்யின் ஆட்டம் ஆரம்பம்…. காலையிலேயே பரபரப்பு உத்தரவு…!

By Nanthini on வைகாசி 30, 2026

Spread the love

சென்னையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான போலீஸ் ஏட்டு வேலப்பன், துறை ரீதியான வழக்கமான நடைமுறைகளைக் கடந்து உடனடியாக நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, குற்றவாளிகளுக்குக் கடுமையான எச்சரிக்கையை விடுக்கும் ஒரு மிகச் சரியான அதிரடி நடவடிக்கையாகும். பொதுவாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் அரசு ஊழியர்கள் முதலில் தற்காலிகப் பணிநீக்கம் (Sustend) செய்யப்பட்டு, நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரே நிரந்தரமாக நீக்கப்படுவதுதான் வழக்கம்;.

ஆனால், முதல்வர் விஜய்யின் “பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும்” என்ற எச்சரிக்கைக்கு இணங்க, இம்முறை காவல்துறை உடனடியாக இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. சட்டத்தைக் காக்க வேண்டிய காவலரே இத்தகைய கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டதால், இந்த உடனடி நீக்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நம்பிக்கையளிப்பதோடு மட்டுமல்லாமல், காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்தவும், இதுபோன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட நினைப்போருக்கு ஒரு தகுந்த பாடமாகவும் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.