அதிமுகவில் குடும்ப அரசியல்.. மகன் மிதுனைத் துணை முதல்வர் ஆக்க EPS திட்டம்..? திமுக – அதிமுக ரகசிய டீல்… அம்பலப்படுத்திய சவுக்கு சங்கர்..!!

By Soundarya on வைகாசி 30, 2026

Spread the love

அதிமுகவின் தற்போதைய நிலை மற்றும் கட்சியின் தலைமை குறித்து யூடியூபர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா 1996 தோல்விக்குப் பிறகு தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை கட்சியை விட்டு ஒதுக்கி வைப்பதாக எழுதிய கடிதத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார். இதன் மூலம் ஜெயலலிதாவின் ஆளுமையையும், தலைமைப் பண்பையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போதைய அதிமுக தலைமை அதை பின்பற்றவில்லை எனச் சாடியுள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த மோசமான தோல்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க மறுப்பதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்குச் சொந்தமாக குடும்பம் இல்லாததால் தொண்டர்களை மட்டுமே நம்பி கட்சியை நடத்தினார்கள் என்றும், ஆனால் எடப்பாடி பழனிசாமிக்குக் குடும்பம் உள்ளதால் தற்போது அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் தலைதூக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

தற்போது அதிமுகவின் அனைத்து முக்கிய முடிவுகளையும் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் மட்டுமே எடுத்து வருவதாகவும், அவரது பேச்சை எடப்பாடி பழனிசாமியே மீறுவதில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தன் மகன் மிதுனைத் துணை முதலமைச்சர் ஆக்குவதற்காக, திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம் என்ற நோக்கில் உதயநிதி ஸ்டாலினை “பாஷ்யம் அபினேஷ் வீட்டில்” எடப்பாடி பழனிசாமி சந்தித்ததாக சவுக்கு சங்கர் பரபரப்புக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு தன் மகன் கொடுத்த அழுத்தத்தால் தான் நடந்தது என்பதை எடப்பாடி பழனிசாமியால் மறுக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

   

தொண்டர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பேரியக்கத்தில் இப்படிப்பட்ட குடும்ப ஆதிக்கம் உருவாவது சரியா என்றும், 2 கோடி தொண்டர்களைக் கொண்ட அதிமுகவை வழிநடத்த எடப்பாடி பழனிசாமிக்குத் தகுதி உள்ளதா என்றும் சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். தனக்கென்று குடும்பமே இல்லை, அதனால் ஊழல் செய்ய மாட்டேன் என்று பறைசாற்றி ஜெயலலிதா கட்சியை வழிநடத்தினாரா அல்லது மகன் பேச்சைக் கேட்டு எடப்பாடி பழனிசாமி வழிநடத்துகிறாரா என்பதை முடிவு செய்ய வேண்டியது அதிமுக தொண்டர்களின் கையில்தான் உள்ளது என அவர் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.