மொத்தமாக காலியாகும் அதிமுக… தவெகவுக்கு தாவிய தீவிர விசுவாசி.. EPS-க்கு அடுத்த ஷாக்…!

By Nanthini on வைகாசி 30, 2026

Spread the love

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், அதிமுகவைச் சேர்ந்த மேலும் இரண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் (Ex-MLAs) தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைத்துக் கொண்டுள்ளனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வான ராமஜெயலிங்கம், கட்சியின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான KAS முன்னிலையில் தவெக-வில் ஐக்கியமானார்.

அவரைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கியப் புள்ளியாகக் கருதப்பட்ட அரக்கோணம் முன்னாள் எம்.எல்.ஏ. ரவியும் தவெக-வில் இணைந்துள்ளார். இவர் கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று தொடர்ச்சியான சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதுடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் (EPS) தீவிர விசுவாசியாக அறியப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தவெக நிர்வாகி மற்றும் அமைச்சர் என். ஆனந்த் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்த இந்த நிகழ்வு, அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழக அரசியல் களத்தில் தவெக-வின் பலம் அதிகரித்து வருவதை உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.