“6 நிமிடங்களுக்கு சூரியனை விழுங்கப்போகும் சந்திரன்”… 1991-க்கு பின் நடக்கும் அந்த விண்வெளி அதிசயம்… நாசா வெளியிட்ட அந்த ஒரு திகிலூட்டும் தேதி…!

By Nanthini on வைகாசி 29, 2026

Spread the love

விண்வெளி விஞ்ஞானிகளின் கணிப்புப்படி, 2026 முதல் 2028-க்கு இடைப்பட்ட காலத்தில் மூன்று முழு சூரிய கிரகணங்கள் நிகழவுள்ளன. இதில் உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு மிக ஸ்பெஷலான கிரகணம், வரும் 2027 ஆகஸ்ட் 2 அன்று நிகழப்போகிறது. இதனை ’21-ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட முழு சூரிய கிரகணம்’ என்று நாசா (NASA) அறிவித்துள்ளது. இந்த அரிய நிகழ்வின் போது, சுமார் 6 நிமிடம் 23 வினாடிகளுக்கு பகல் நேரத்திலேயே பூமி இருண்டு போகும் வாய்ப்புள்ளது. இதற்கு முன்னதாக, இந்த அளவுக்கு நீண்டதொரு கிரகணம் கடந்த 1991-ஆம் ஆண்டில் தான் பூமியில் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

   

இந்து பஞ்சாங்கத்தின்படி, இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் ஆவணி மாத அமாவாசை மற்றும் ஹரியாலி அமாவாசை பண்டிகை நாளில் வருகிறது. சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும் பாதையில் பயணிப்பதால், அது சூரியனை முழுமையாக மறைத்து நீண்ட நேரம் இந்த நிழல் உலகை ஆட்கொள்ளும். இந்த கிரகணம் நீண்ட நேரம் நீடிப்பதால், பல பகுதிகளில் பகல் பொழுதே நள்ளிரவு போல இருள் சூழும். அந்த சமயத்தில், சூரியனின் வெளிப்புற வளிமண்டலப் பகுதியான ‘கொரோனா’வை (Corona) வெறும் கண்களாலோ அல்லது சிறப்பு உபகரணங்கள் மூலமாகவோ விஞ்ஞானிகளும், விண்வெளி ஆர்வலர்களும் மிகத் தெளிவாகக் காண முடியும்.

   

இந்த அதிசய நிகழ்வு உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தெரியாது. ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் தொடங்கி, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வானில் இந்த முழு சூரிய கிரகணம் காட்சி தரும். குறிப்பாக, எகிப்தில் உள்ள புகழ்பெற்ற லக்ஸர் (Luxor) நகரத்தில் முழுமையாக 6 நிமிடம் 19 வினாடிகளுக்கு இந்த கிரகணத்தை மிகத் தெளிவாகப் பார்க்க முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வுக்குப் பிறகு, இதே போன்றதொரு நீண்ட முழு சூரிய கிரகணத்தை நாம் பார்க்க வேண்டுமென்றால், மீண்டும் கி.பி. 2114-ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

 

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 2, 2027 அன்று நடக்கப்போகும் இந்த சூரிய கிரகணம் நாட்டின் எந்தப் பகுதியிலும் நேரடியாகத் தெரியாது. இந்தியாவில் இது புலப்படாததால், ஜோதிட ரீதியான எந்தப் பாதிப்போ அல்லது ஆன்மீக ரீதியான ‘சூதக் காலம்’ (தீட்டுக் காலம்) நியதிகளோ நம் நாட்டிற்குப் பொருந்தாது. இருப்பினும், இந்த விண்வெளி அதிசயத்தை நேரலையில் கண்டு ரசிக்க விரும்பும் இந்திய மக்கள், நாசாவின் (NASA) அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் வழியாக இதனைத் தங்கு தடையின்றிப் பார்த்து மகிழலாம்.