மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் நகரில், கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு நடுரோட்டிற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் பரபரப்பாகக் காணப்படும் ஒரு முக்கிய சாலையில், இந்தத் தம்பதியினர் பொதுமக்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோதலின் போது, ஆத்திரமடைந்த மனைவி தனது கணவரை நடுரோட்டில் வைத்து தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரைப் பளார் பளார் என அடுத்தடுத்துக் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ஒரு கட்டத்தில் மனைவியைத் தள்ளிவிட முயன்றார். இவர்களின் இந்த அதிவேக ‘ஹை-வோல்டேஜ்’ நாடகத்தைக் கண்டு, சாலையில் சென்ற பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அப்படியே ஸ்தம்பித்து நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.
சுற்றியிருந்தவர்களில் சிலர் இந்தச் சண்டையைத் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருவதோடு, பொதுவெளியில் தம்பதியினர் இப்படி நடந்து கொண்டது பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
