Breaking: ரூ.1000 உதவித்தொகை விண்ணப்பம்… தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு…!!!

By Soundarya on வைகாசி 28, 2026

Spread the love

தமிழ்நாட்டில் வேலையில்லாத இளைஞர்களுக்கு ₹1,000 வரை உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்களை அரசு வரவேற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவினருக்கு 10ஆம் வகுப்பு முடித்திருந்தால் ₹300, பிளஸ் 2 முடித்திருந்தால் ₹400 மற்றும் பட்டப்படிப்பு (டிகிரி) முடித்திருந்தால் ₹600 வழங்கப்படுகிறது. இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு 10ஆம் வகுப்பிற்கு ₹600, பிளஸ் 2-விற்கு ₹750 மற்றும் பட்டப்படிப்பிற்கு ₹1,000 என உதவித்தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகையைப் பெற விரும்புவோர், தங்களது வேலைவாய்ப்பு பதிவு அட்டை, மதிப்பெண் சான்றிதழ் (மார்க் சீட்), மாற்றுச் சான்றிதழ் (TC), ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் (பாஸ்புக்) மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகிய தேவையான ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுடையவர்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் நேரில் சென்று விண்ணப்பிக்குமாறு அரசு அறிவித்துள்ளது.