BIGNEWS: தமிழகம் முழுவதும் இன்று இணையதள சேவைகள் இயங்காது… அரசு முக்கிய அறிவிப்பு..!!

By Soundarya on வைகாசி 28, 2026

Spread the love

தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) சார்பில், உயரழுத்த மின்நுகர்வோருக்கான பில்லிங் சேவை மற்றும் தரவுத்தள அமைப்பை மேம்படுத்தும் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளின் காரணமாக, இன்று (மே 28) நாள் முழுவதும் மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளச் சேவைகள் தற்காலிகமாக இயங்காது என்று மின்சார வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இணையதள முடக்கம் காரணமாகப் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் ஆன்லைன் மூலமாக மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட மின்வாரியம் சார்ந்த சில முக்கிய டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தற்காலிகச் சேவை பாதிப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன், இணையதளச் சேவைகள் அனைத்தும் மீண்டும் வழக்கம் போல் சீராகச் செயல்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.