தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் முறைகேடுகளைத் தடுக்க, அமைச்சர் என். ஆனந்த் ஒரு புதிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இனிவரும் காலங்களில் இத்துறையின் கீழ் நடைபெறும் சாலைகள் மற்றும் கட்டிடக் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் முழுமையாக வீடியோ பதிவு செய்த பிறகே, அதற்கான நிதி அல்லது பணம் விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர் ஆணையிட்டுள்ளார். பணிகள் ஏதும் சரியாகச் செய்யப்படாமல், போலியாகப் பில் (Bill) போட்டு முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சி.எம் விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, நிர்வாக ரீதியாகப் பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளும் புதிய மாற்றங்களும் வந்தவண்ணம் உள்ளன. அந்த வரிசையில், ஊரக வளர்ச்சித் துறையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் கண்காணிப்பு நடைமுறையானது, அரசுப் பணிகளில் முறைகேடுகளை முற்றிலும் ஒழித்து வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என அரசுத் தரப்பில் நம்பப்படுகிறது.
