BREAKING: சற்றுமுன் அதிமுகவிலிருந்து விலகி TVKவில் இணைந்த முக்கிய புள்ளி… காலையிலேயே EPS-க்கு ஷாக்..!!

By Soundarya on வைகாசி 28, 2026

Spread the love

முன்னாள் அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தமிழக அமைச்சர் என். ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ஓ. பன்னீர்செல்வத்தின் (OPS) ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த இவர், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையிலான அதிமுக அணியுடன் இணைந்தார். எனினும், தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்வி மற்றும் அதற்குப் பின் கட்சியில் ஏற்பட்ட அடுத்தடுத்த அரசியல் குழப்பங்கள் காரணமாக, அவர் அதிமுகவிலிருந்து விலகி தற்போது TVK கட்சியில் ஐக்கியமாகியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெல்லமண்டி நடராஜன், அப்போதைய அதிமுக ஆட்சியில் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் மாற்று அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்து விஜய்யின் TVK கட்சியில் இணைந்துள்ள செய்தி, தமிழக அரசியல் வட்டாரத்திலும் குறிப்பாக திருச்சி பகுதி அதிமுகவினரிடையேயும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.