“அவர் சாகுறதுக்கு அந்த ரோல் தான் காரணம்!”.. தமிழ் திரையுலகையே உலுக்கிய கருப்பு சுப்பையாவின் மரண ரகசியம்..!!!

By Muthu Mani on வைகாசி 26, 2026

Spread the love

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 1990-களில் கவுண்டமணி – செந்தில் கூட்டணியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே நீங்கா இடம்பிடித்தவர் நடிகர் கருப்பு சுப்பையா. ‘பெரிய மருது’, ‘கட்டபொம்மன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவரை, நகைச்சுவைக் காட்சி ஒன்றில் கவுண்டமணி ‘ஆப்பிரிக்கா அங்கிள்’ என்று நையாண்டியாக அழைப்பது இன்று வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். குறிப்பாக, இயக்குநர் என்.கே. விஸ்வநாதன் இயக்கத்தில் வெளியான ‘பெரிய மருது’ திரைப்படத்தில், கவுண்டமணியும் செந்திலும் ஈயம் பூசும் தொழில் செய்பவர்களாக நடித்திருப்பார்கள். அதில் தன்னிடம் இல்லாத அண்டாவிற்கு ஈயம் பூச விலை கேட்கும் கருப்பு சுப்பையாவுக்கு, அவர்கள் இருவரும் சேர்ந்து உடம்பெல்லாம் பெயிண்ட் அடித்து ஈயம் பூசிவிடும் காட்சி ரசிகர்களை இன்றும் சிரிக்க வைக்கும் ஒரு எவர்கிரீன் காமெடி ஆகும்.

ஆனால், ரசிகர்களைக் குதூகலப்படுத்திய இந்த நகைச்சுவைக் காட்சியே அந்த அப்பாவி நடிகரின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றி, அவரது உயிருக்கே உலை வைத்துள்ளது என்பதுதான் சோகமான உண்மை. இக்காட்சியில் நடிக்கும்போது தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கருப்பு சுப்பையாவின் உடல் முழுவதும் நிஜ பெயிண்ட்டையே ஊற்றியுள்ளனர். இதனால், அவரது தோலின் வழியே உடலுக்குள் பெயிண்ட் நச்சுத்தன்மை (Paint toxicity) ஊடுருவி, கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை மறைந்த நடிகரும் இயக்குநருமான மனோபாலா தனது பேட்டி ஒன்றில் வேதனையுடன் உறுதிப்படுத்தியிருந்தார். இந்த விபரீதத்தால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போன கருப்பு சுப்பையா, தனது இறுதி காலத்தில் பட வாய்ப்புகளும் இல்லாமலும், தன்னை கவனித்துக் கொள்ள ஆள் இல்லாமலும் வறுமையில் வாடி கடந்த 2013-ஆம் ஆண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.