டாஸ்மாக் கடைகளுக்கு அடுத்த செக்… லிஸ்ட் எடுத்த உளவுத்துறை… தமிழக அரசுக்குப் போன ஷாக் ரிப்போர்ட்…!

By Swetha on வைகாசி 24, 2026

Spread the love

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்திய மாநில உளவுத் துறை, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் அடங்கிய விரிவான பட்டியலைத் தயார் செய்துள்ளது. இந்த ரகசியப் பட்டியல் தற்போது டாஸ்மாக் மற்றும் துறை சார்ந்த உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உளவுத் துறை அளித்துள்ள இந்த பட்டியலின் அடிப்படையில், விதிகளை மீறி கூடுதல் பணம் வசூலிக்கும் கடை ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பணியிட மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பணியாளர்களைக் கண்டறிந்து, இந்த முறை முறைகேடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

   

இது தவிர, மாநிலம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மிக அருகில் விதிகளை மீறி இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் எவை, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்து அடிக்கடி சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும் கடைகள் எவை என்பது குறித்த கூடுதல் விவரங்களையும் உளவுத் துறை சேகரித்துள்ளது. இந்த விவரங்களின் அடிப்படையில், குறிப்பிட்ட சில கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது அல்லது மூடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.