வஞ்சிகா என்ற 13 வயது சிறுமி ஒரு நாள் மாலை, தனது வீட்டின் அருகே வசிக்கும் தோழியின் வீட்டிற்கு விளையாடச் செல்வதாகத் தன் தாயிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். தோழியின் வீடு அவர்கள் வீட்டிலிருந்து சில வீடுகள் தள்ளித்தான் இருந்தது. அங்கு சென்று அவள் தன் தோழியை அழைத்தபோது, அவளது தோழியின் தந்தை அறையிலிருந்து வெளியே வந்து, அவள் மதியமே அவளது பாட்டி வீட்டிற்குச் சென்றுவிட்டதாகவும், பத்து நாட்கள் கழித்துத்தான் வருவாள் என்றும் கூறியுள்ளார்.
விவரம் தெரிந்ததும் வஞ்சிகா அங்கிருந்து புறப்படத் தயாரானபோது, அந்தத் தோழியின் தந்தை அவளைத் தடுத்து நிறுத்தி, விளையாட வந்த இடத்தில் ஒரு புதிய விளையாட்டு விளையாடலாம் எனக் கூறித் தன் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஆடைகளைக் களையும்படி அவர் கூறியதைக் கேட்டு வஞ்சிகா பயந்துபோய் அறையை விட்டு வெளியேற முயன்றுள்ளார். ஆனால், அந்த நபர் சிறுமியின் கையைப் பிடித்து, வாயைப் பொத்தி, கட்டிலில் தள்ளி அவளது ஆடைகளைக் கொடூரமாகக் கிழித்தெறிந்துள்ளார்.
அந்த அறையிலிருந்து தப்பிக்கவும் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் 13 வயது வஞ்சிகா வலியால் துடித்துக் கதறி அழுதுள்ளார். எனினும், அந்த நபர் சிறிதும் இரக்கமின்றி அச்சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனது இந்த விபரீதச் செயல் வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தில், அந்த நபர் வஞ்சிகாவின் கழுத்தை நெரித்துக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். விளையாடச் சென்ற இடத்தில் நேர்ந்த இந்த மனிதாபிமானமற்ற கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
