மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக, தமிழக முதலமைச்சர் விஜய் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று தமழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். வெறும் கூட்டணி அரசியல் காரணங்களுக்காக, கர்நாடக அரசின் இந்த அநீதியான நடவடிக்கையைத் தமிழக அரசு மௌனமாக வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநில உரிமை மற்றும் மக்களின் நலன் ஆகியவற்றில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எவ்வித புதிய அணையும் கட்டக் கூடாது என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முதலமைச்சர் விஜய் உறுதியாக நிலைநாட்ட வேண்டும் என்றும் ஜான்பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
