“ஆட்சி நீடிக்குமா?”.. புதுச்சேரியில் பரபரப்பு கிளப்பிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.. ஆட்டம்காணும் அரசியல் களம்..!!!

By Muthu Mani on வைகாசி 24, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று புதுச்சேரிக்குச் சென்றிருந்தார். அங்குள்ள முத்தியால்பேட்டையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தனது நெருங்கிய உறவினரான தெரசா பெனடிக், கன்னியாஸ்திரிகளுக்கான கர்மேல் மடத்தில் 25 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி நடைபெற்ற வெள்ளி விழாவில் கலந்து கொள்வதற்காகவே தான் இங்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அறுதி பெரும்பான்மை பெற்று இருக்கும் ஓர் அரசு நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்றும், எம்எல்ஏக்களின் விருப்பமும் அதுவாகவே இருப்பதால் அதன்படி ஆட்சி தொடரும் என்றும் கூறினார். அதேவேளையில், கோவை சிறுமி கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது குறித்த கேள்விக்கு, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ள முதல்வர் விஜய், விரல் நுனியில் விவரங்களை வைத்துக்கொண்டு பல்வேறு திட்டங்களையும், சீரிய முயற்சிகளையும் மேற்கொள்வதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம் என்றும், அவருக்கு ஒத்துழைப்பு அளிப்பதும் நல்வாழ்த்துகள் கூறுவதும் நமது கடமை என்றும் பதிலளித்தார்.

   

மேலும், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்குத் தமிழக அரசு நிலம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு கேட்டு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த பேரவைத் தலைவர், “இது தொடர்பான விவரங்கள் எனக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை; உரிய நேரத்தில் இந்த விவரங்கள் என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டால், அதனைத் தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.