தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அர்ஜுனின் மேலாளராகவும், பிரபல தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்த கோவை மணி (69) அவர்கள் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். ‘மிஸ்டர் மகாராணி’, அர்ஜுன் நடித்த ‘மாசி’ மற்றும் ‘பாட்டாளி மகன்’ உள்ளிட்ட பல வெற்றிகரமான திரைப்படங்களைத் தயாரித்து சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். சமீபத்தில் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி ஒட்டுமொத்த கோலிவுட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் கூடுவாஞ்சேரியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக விநியோகஸ்தர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
