“பள்ளிகள் திறந்த முதல் நாளே” தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்.. தமிழக அரசின் உத்தரவு..!!

By Soundarya on வைகாசி 23, 2026

Spread the love

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அன்றைய தினமே அனைத்து மாணவர்களுக்கும் எவ்விதத் தடையுமின்றி புத்தகங்கள் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

புத்தக விநியோகப் பணிகளில் எந்தவொரு தொய்வும் ஏற்படக் கூடாது என்று கல்வித் துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளிலிருந்தே தங்களது படிப்பைத் தடையின்றித் தொடங்குவதற்கு ஏதுவாக இந்த விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.