BREAKING: சென்னையை சூழ்ந்த கார்மேகம்: நடுவானில் தவித்த விமானம்…. பதறிய பயணிகள்..!

By Nanthini on வைகாசி 23, 2026

Spread the love

சென்னையில் திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாகப் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால், விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மீனம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டென மாறிய வானிலையால், ஹைதராபாத்திலிருந்து சென்னை நோக்கி வந்த பயணிகள் விமானம் தரையிறங்க முடியாமல் தவித்தது; பின்னர் அது பாதுகாப்பாகத் திருப்பதி விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டு அங்கு வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. நகரின் மற்றொரு பகுதியான மெரினா கடற்கரையில் இன்று காலை முதலே பலத்த புழுதி காற்று வீசி வரும் வேளையில், சென்னையின் பெரும்பாலான இடங்களில் கார்மேகங்கள் சூழ்ந்து, இதமான குளுகுளு சூழல் நிலவி வருகிறது.