தமிழகத்தை உலுக்கிய பயங்கரம்… 10 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை… உச்சக்கட்ட கொடூரம்..!

By Nanthini on வைகாசி 23, 2026

Spread the love

கோவையில் 10 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட கொடூரம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. நேற்று காணாமல் போன சிறுமி, குளக்கரையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.  கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 21-ஆம் தேதி மாலை, வீட்டின் அருகே உள்ள மளிகைக் கடைக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தீவிரமாகத் தேடியும் சிறுமி குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, அச்சிறுமி கடைசியாகச் சென்ற மளிகைக் கடைக்கு விரைந்துச் சென்று பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் சிறுமியைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. இதனால் நிலைகுலைந்த பெற்றோர், உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மாயமான சிறுமியைத் தேடும் பணியில் தீவிரமாக களமிறங்கினர்.

   

இந்த நிலையில், நேற்று (மே 22) மாலை கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் சிறுமி ஒருவரின் சடலம் கிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற போலீசார், அங்கு மீட்கப்பட்ட சடலம் கடத்தப்பட்ட 10 வயது சிறுமியுடையதுதான் என்பதை உறுதி செய்தனர். பின்னர் சிறுமியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி நேரில் சென்று விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார்.

   

இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தல் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகத்திற்குரிய நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர் ஒருவர் போலீசாரிடம் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தகவலை உறுதிப்படுத்த காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.