தலைமைச் செயலகத்தில் அமைச்சர் N.ஆனந்தை நேரில் சந்தித்த அதிமுக மாநில இலக்கிய அணி இணை செயலாளர் சிவராஜ், மகளிரணி துணை செயலாளர் ஜெயதேவி மற்றும் தென் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தங்களை ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந்த அரசியல் கட்சி மாறும் நிகழ்வு மற்றும் சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு நிர்வாகப் பணிகள் மட்டுமே நடைபெற வேண்டிய கோட்டையான தலைமைச் செயலகத்தில் இது போன்ற அரசியல் கட்சி சேர்க்கை நிகழ்வுகளை நடத்துவதா என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கடுமையான கண்டனங்களையும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
