தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான (Combined Technical Services) மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, தகுதி பெற்ற தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் மே மாதம் 29-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்விற்கான அடுத்தகட்ட நகர்வாக சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வர்கள் தங்களின் அசல் ஆவணங்களைச் சரிபார்க்கத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் அனைத்தும் தேர்வர்களுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட SMS (கைபேசி எண்) மற்றும் E-mail (மின்னஞ்சல்) மூலமாக மட்டுமே முழுமையாகத் தெரிவிக்கப்படும் என்று TNPSC தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், குறிப்பிட்ட தேதியில் சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு வரத்தவறும் தேர்வர்களுக்கு எக்காரணம் கொண்டும் மறுவாய்ப்பு அளிக்கப்படாது எனவும், அவர்களின் தகுதி நிராகரிக்கப்படும் எனவும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
