தமிழகத்தில் நாளை முதல் வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட முக்கிய தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவித்துள்ளது. அண்மையில் தான் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கார், ஜீப், வணிகப் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் ₹25 முதல் ₹100 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
