BREAKING:அதிகாலையில் கைது.. CM விஜய்யின் ஆட்டம் தொடங்கியது..!

By Muthu Mani on வைகாசி 22, 2026

Spread the love

தென் மாவட்டங்களில் குற்றங்களை முற்றிலும் தடுக்க தமிழக முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில், காவல்துறையினர் ‘ஷீல்ட் நெட்’ (Shield Net) அதிரடி நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த அதிரடி வேட்டையின் மூலம் ஒரே நாளில் மட்டும் 33 ரவுடிகள் மற்றும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த 27 கைதிகள் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குற்றப்பின்னணி கொண்ட 261 நபர்கள் உட்பட மொத்தம் 3,295 சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளதோடு, முக்கியச் சந்திப்புகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனைகளும் பன்மடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.