தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி முதல்வரின் அரசியல் ஆலோசகராகவும், முதல்வர் விஜய்யின் நெருங்கிய நண்பரான விஷ்ணு ரெட்டி பொது விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, CM விஜய்யின் ஆலோசகராக ஜோதிடர் ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், பின்னர் அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
