“அதிமுக 9 முறை, திமுக 3 முறை”.. ஆனாலும் செய்யாததை ‘ஒரே ஒரு’ முடிவில் முடித்து காட்டிய விஜய்… 70 வருஷமா நடக்காத அதிசயம்….!

By Nanthini on வைகாசி 22, 2026

Spread the love

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 70 ஆண்டுகாலமாக அவிநாசி தனித் தொகுதியில் வெற்றி பெற்ற எவருக்கும் கிடைக்காத வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது. இதுவரை நடந்த 12 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக ஒன்பது முறையும், திமுக மூன்று முறையும் மாறி மாறி இத்தொகுதியில் களம் கண்டு வென்றபோதிலும், அங்கிருந்து யாரும் அமைச்சரவையில் இடம்பெற்றதில்லை என்ற நீண்டகாலக் குறையை முதல்வர் விஜய் தற்போது உடைத்தெறிந்துள்ளார்.

இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான 28 வயது இளம் பெண் கமலிக்குத் தனது அமைச்சரவையில் வாய்ப்பளித்ததன் மூலம், இந்த ஆட்சிக்காலத்தின் “மிக இளம் அமைச்சர்” என்ற பெருமையையும் அவருக்கு முதல்வர் தேடித்தந்துள்ளார். பாரம்பரியக் கட்சிகள் பல தசாப்தங்களாகச் செய்யத் தவறிய இந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்தை, முதல்வர் விஜய் துணிச்சலுடன் செய்து காட்டியிருப்பது ஒட்டுமொத்த தமிழக அரசியல் அரங்கிலும் உற்றுநோக்கத்தக்க ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது என அரசியல் நோக்கர்கள் பாராட்டி வருகின்றனர்.