விஜய்க்கு ஆதரவு வாபஸ்… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்… நள்ளிரவில் மாறிய கணக்கு….!

By Nanthini on வைகாசி 21, 2026

Spread the love

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன. முன்னாள் முதல்வர் விஜய் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் தங்களுக்கு இடம் கிடைக்காது என்பது உறுதியானதைத் தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த 7 சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA-க்கள்) மீண்டும் எடப்பாடி பழனிசாமி (EPS) அணிக்கு ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

குறிப்பாக, பாலக்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன் மற்றும் பாப்பிரெட்டிபட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் வெற்றிவேல் ஆகியோர் மீண்டும் இ.பி.எஸ் பக்கம் திரும்ப தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது; புதிய அமைச்சரவையில் அதிகாரமும் இல்லாமல், அதே நேரத்தில் கட்சித் தொண்டர்களின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளாக விரும்பாததே இந்த திடீர் அதிருப்திக்குக் காரணம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.