“அதை யாரும் நம்பாதீங்க”… லீக்கான தவெக ரகசிய ஆடியோ… 4.1 நிமிடத்தில் மொத்தமாகப் பொங்கித் தீர்த்த ஒன்றிய செயலாளர்… விழுப்புரம் தவெக-வில் அரங்கேறிய ட்விஸ்ட்…!!!

By Muthu Mani on வைகாசி 20, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான ச. ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற மறுநாளே, அக்கட்சியின் உள்விவகாரங்கள் தொடர்பான ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட வாட்ஸ்-அப் குழுக்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் இந்த ஆடியோ, தற்போதைய அரசியல் சூழலில் பேசுபொருளாக மாறியுள்ளது. மிகச் சரியாக 4.1 நிமிடங்கள் நீளம்கொண்ட அந்த ஆடியோ பதிவை, அக்கட்சியின் உண்மைத்தன்மை வாய்ந்த சில நிர்வாகிகளே ஊடக அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த ஆடியோவில் தவெக-வின் விழுப்புரம் தெற்கு மாவட்டம், கோலியனூர் கிழக்கு ஒன்றியச் செயலாளரான மைக்கேல் அந்தோணிராஜ் என்பவர் பேசியுள்ளார். கடந்த ஒரு வார காலமாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பலதரப்பட்ட மக்கள் தவெக-வை நோக்கி படையெடுத்து, மிக அதிக அளவில் கட்சியில் இணைந்து வருவதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். அக்கட்சியின் புதிய ஆட்சிப் பொறுப்பேற்புக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த அசுர வளர்ச்சி, விழுப்புரம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

   

அதேசமயம், கட்சியில் இணையும் புதியவர்கள் மாவட்டத் தலைமையிடம் பெருந்தொகையைப் பணம் கொடுத்துவிட்டுத்தான் தங்களை இணைத்துக் கொண்டதாக அவதூறு பரப்பி வருவதாகவும் மைக்கேல் அந்தோணிராஜ் குற்றம் சாட்டியுள்ளார். கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இரண்டு கிராமங்களில் இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய பொய்ப் பிரசாரங்களை தவெக தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கட்சியின் ஆரம்பக்காலம் தொட்டே உழைத்து வரும் பழைய நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர் எப்போதும் கைவிட மாட்டார் என்றும், அனைவரும் நம்பிக்கையுடன் இருக்குமாறும் கூறி அந்த ஆடியோவை அவர் நிறைவு செய்துள்ளார்.