டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ₹10 முதல் ₹30 வரை வசூலிக்கப்படுவதாக மது பிரியர்கள் தரப்பில் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியிலும் இந்த கூடுதல் கட்டண வசூல் தொடர்வதாகப் புகார்கள் எழுந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதைக் தீவிரமாகக் கண்காணித்து அறிக்கை (ரிப்போர்ட்) சமர்ப்பிக்குமாறு நுண்ணறிவு மற்றும் உளவுத்துறை போலீசாருக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் இந்த நேரடி அறிவுறுத்தலின் பேரிலேயே தற்பொழுது இந்த அதிரடி கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
