BREAKING: இனி ‘நமது அம்மா’ கிடையாது… அதிமுகவின் புதிய ‘போர்வாள்’ ரெடி… அறிமுகம் செய்தார் EPS….!

By Nanthini on வைகாசி 20, 2026

Spread the love

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக இருந்த ‘நமது அம்மா’ நாளிதழ் சி.வி. சண்முகத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) ‘போர்வாள்’ என்ற பெயரில் புதிய அதிகாரப்பூர்வ நாளேட்டைத் தொடங்கியுள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து இந்த புதிய நாளேட்டை அவர் முறைப்படி அறிமுகம் செய்து வெளியிட்டார். உட்கட்சி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், தங்களின் அரசியல் கருத்துக்களையும் கொள்கைகளையும் தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்கான புதிய ஊடகப் பிரசாரக் கருவியாக இந்த ‘போர்வாள்’ நாளிதழ் தற்பொழுது உருவெடுத்துள்ளது.