“ஒரே ஒரு இன்ஸ்டா போஸ்ட்”.. த்ரிஷா போட்ட அந்த ரகசிய வார்த்தைக்கு பின்னால் இருக்கும் உண்மை… மிரண்டு போன சினிமா உலகம்…!

By Nanthini on வைகாசி 20, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாகத் தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பவர் த்ரிஷா கிருஷ்ணன். சமீபகாலமாக இவரது படங்கள் எதிர்பார்த்த கமர்ஷியல் வெற்றியைப் பெறவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கருப்பு’ திரைப்படம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு சூர்யா – த்ரிஷா கூட்டணி இணைந்துள்ள இந்தத் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி, த்ரிஷாவின் திரைப்பயணத்தில் மீண்டும் ஒரு புதிய உற்சாகத்தையும், ரசிகர்களுக்குக் கொண்டாட்டத்தையும் தந்துள்ளது.

இந்தத் தொடர் வெற்றிகளின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக, நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு தளப் புகைப்படங்களைப் பகிர்ந்து, “My magical May said, one more for the win… Just God things” என்று பதிவிட்டுள்ளார். த்ரிஷாவின் இந்த ஒற்றை வரிப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வைரலாகி விவாதங்களை கிளப்பியுள்ளது. த்ரிஷா ஏன் இந்த மே மாதத்தை ‘மேஜிக்கல் மே’ (Magical May) என்று குறிப்பிட்டார் என்பதற்கான சுவாரசியமான பின்னணிகளையும் ரசிகர்கள் பட்டியலிட்டு வருகின்றனர்.

   

ரசிகர்களின் கணிப்புப்படி, இந்த மே மாதம் த்ரிஷாவின் வாழ்வில் மூன்று முக்கிய மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்டுவந்துள்ளது. முதலாவதாக, மே 4 ஆம் தேதி த்ரிஷா தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இரண்டாவதாக, அதே மே 4 ஆம் தேதி வெளியான தமிழக தேர்தல் முடிவுகளில் த்ரிஷாவின் நீண்டகால நெருங்கிய நண்பரான விஜய் அரசியல் ரீதியாக யாரும் எதிர்பார்க்காத மாபெரும் வெற்றியைப் பெற்றார். மூன்றாவதாக, தற்போது ‘கருப்பு’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட்டாக அமைந்து த்ரிஷாவின் ஸ்டார் பவரை மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த மூன்று காரணங்களால்தான் த்ரிஷா இம்மாதத்தை மேஜிக்கல் மாதம் எனக் உருகியுள்ளார்.

   

‘கருப்பு’ திரைப்படத்தில் த்ரிஷாவின் காட்சிகள் குறைவாக இருந்தாலும், தனது இயல்பான நடிப்பு மற்றும் தனித்துவமான திரை ஆளுமையால் (Screen Presence) ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார். ‘கில்லி’, ‘சாமி’ தொடங்கி ’96’, ‘பொன்னியின் செல்வன்’ எனத் தனது கேரியரில் பல மைல்கல் படங்களைக் கொடுத்த த்ரிஷா, கதாநாயகிகளின் மார்க்கெட் ஆயுள் குறைவு என்ற பொதுப்புத்தியை உடைத்து இன்றும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து மாஸ் காட்டி வருகிறார். பிறந்தநாள் மகிழ்ச்சி, நண்பரின் அரசியல் வெற்றி, ‘கருப்பு’ பட ஹிட் என இந்த மே மாதம் த்ரிஷாவுக்கு உண்மையிலேயே ஒரு மேஜிக்கல் மாதமாகவே அமைந்துவிட்டது!