200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது அமல்..? அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட குட் நியூஸ்..!!

By Soundarya on வைகாசி 20, 2026

Spread the love

தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், மின்சார வாரியம் தற்போது கிட்டத்தட்ட ரூ. 2.5 லட்சம் கோடி கடனில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முந்தைய திமுக அரசு பல்வேறு முறைகேடுகளைச் செய்துள்ளதால், மின்சார வாரியத்தை சீரமைத்து மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்கும் முயற்சிகள் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையைச் சரிசெய்து பணியாளர்களை அதிகப்படுத்திய பிறகே, பொதுமக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் ‘மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் கணக்கிடும் முறை’ முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் விளக்கியுள்ளார்.

மின்சார வாரியம் அதிக கடனில் மூழ்கியிருந்தாலும், தவெக அரசு தனது முக்கிய தேர்தல் வாக்குறுதியான 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தைத் தொடர்ச்சியாக வழங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார். கடந்த மே 10-ஆம் தேதியே இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை (ஆர்டர்) பிறப்பிக்கப்பட்டுவிட்டது. இதனால், வரக்கூடிய ஜூன் மாதத்தில் இருந்து நுகர்வோர்கள் அனைவரும் இந்த 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தின் மூலம் முழுமையான பலனைப் பெறத் தொடங்குவார்கள் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.