பேரப்பிள்ளைகள் சொன்னாங்கன்னு ஓட்டுப் போடுறதா.? ஜனநாயகம் வேடிக்கையாகிடுச்சு… ஜனநாயகத்தை வெளுத்து வாங்கிய சீமான்..!!

By Soundarya on வைகாசி 19, 2026

Spread the love

பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனையுடன் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியக் கடமையான வாக்களிப்பை, மக்கள் எந்தவொரு புரிதலும் இன்றி விளையாட்டுத்தனமாக அணுகுவதை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் நலனுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தான் உண்மையாகப் பேசிய விஷயங்கள் தற்போதைய மக்களுக்கு வெறும் வேடிக்கையாக மட்டுமே தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். உண்மை பேசுபவர்களைப் புறந்தள்ளிவிட்டு, மேடைகளில் வெறும் வேடிக்கை காட்டி மக்களை ஏமாற்றுபவர்களைத் தலைவர்களாகப் பார்க்கும் மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் சீமான் ஆதங்கப்பட்டுள்ளார்.