தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச் சரியாகத் தலைமைச் செயலகம் வந்து தனது பணிகளைத் தொடங்குகிறார். முதலமைச்சரின் இந்த அதிரடியான நேர நிர்வாகம் மற்றும் சுறுசுறுப்பான செயல்பாடுகள், கோட்டை வட்டாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
முதலமைச்சரின் இந்த வழக்கத்தைப் பின்பற்றி, தலைமைச் செயலக அதிகாரிகளும் தங்களின் துறை ஊழியர்களுக்குக் கடுமையான வருகை நேர உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். அனைத்து அரசு ஊழியர்களும் காலையிலேயே பணிக்கு வந்துவிட வேண்டும் என்பதை அதிகாரிகள் தற்போது கட்டாயமாக்கியுள்ளனர்.
இதன் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் தாமதமாக வரும் ஊழியர்களின் வருகைப் பதிவேடு மூடப்பட்டு, அவர்களுக்கு ‘ஆப்சென்ட்’ அல்லது தற்செயல் விடுப்பு வெட்டப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். முதலமைச்சரின் இந்த நேரப் பங்களிப்பு நடவடிக்கை காரணமாக, ஒட்டுமொத்த தலைமைச் செயலகமும் தற்போது மிகுந்த சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது.
