உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. தாய் மற்றும் அவரது இளம் மகள் ஆகிய இருவருக்குமே ஒரே நபருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, கணவன் தனது மனைவியையும் அவளது கள்ளக்காதலனையும் வீட்டின் உள்ளே தவறான நிலையில் நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பிறகு, “நடந்தது நடந்துவிட்டது, இனிமேலாவது ஒழுங்காக இரு… நமக்கு ஒரு குடும்பம் இருக்கிறது, இது மகளின் வாழ்க்கையை என்ன பாடுபடுத்தும்?” என்று தன் மனைவிக்கு அவர் பொறுமையாக எடுத்துக்கூறி திருத்த முயன்றுள்ளார். ஆனால், காமக் கண்ணை மறைத்த அந்தப் பெண் கணவனின் அறிவுரையைக் கேட்காமல் தனது கள்ளக்காதலைத் தொடர்ந்துள்ளார்.
ஒருநாள் மகளும் அவளது கள்ளக்காதலனும் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த தாய், அவர்கள் இருவரிடமும் ஒரு கொடூரமான திட்டத்தைக் கூறியுள்ளார். “நாம இருவருக்குமே அவன் (கள்ளக்காதலன்) தான் புருஷன் மாதிரி, அதனால் இந்த விவகாரத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் உன் அப்பனை வழியிலிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்து” என்று மகளின் மனதை மாற்றியுள்ளார். தாயின் பேச்சைக் கேட்டுப் புத்தி மாறிய மகள், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற தந்தை என்றும் பாராமல் அவரைக் கொடூரமாகக் கொலை செய்து அநியாயமாக உயிரைப் பறித்துள்ளார்.
மறுநாள் காலையில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் நகைகளைக் கொள்ளையடித்துவிட்டுத் தனது கணவரைக் கொன்றுவிட்டதாகக் கூறி தாயும் மகளும் ஊர் மக்கள் நம்பும் படி ஒப்பாரி வைத்து அழுது நாடகமாடியுள்ளனர். ஆனால், சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் தாய் மற்றும் மகளின் செல்போன் அழைப்பு விவரங்கள் (Call Details) மற்றும் அவர்களது இருப்பிடத் தரவுகளை (Tower Location) ஆய்வு செய்த போது, அவர்கள் ஆடிய நாடகம் அம்பலமானது. இறுதியில், திட்டமிட்டுக் கொலை செய்த குற்றத்திற்காகத் தாய், மகள் மற்றும் அவர்களது கள்ளக்காதலன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
